மதுரையில் அழகிரி-ஸ்டாலின் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலினும் மு.க. அழகிரியும் மதுரையில் திடீர் என்று சந்தித்துக் கொண்டனர்.

தனது இடத்தைப் பிடிப்பதற்காக ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே எந்த மோதலும் நடக்கவில்லை என்றும்அழகிரியும் ஸ்டாலினும் ஆண்டிப்பட்டி வேட்பாளர் வைகை சேகருக்காக தனித்தனியே பிரச்சாரம் செய்துவருவதால் அவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதாக அர்த்தமல்ல என்றும் திமுக தலைவரும் அவர்களுடையதந்தையுமான கருணாநிதி நேற்று (புதன்கிழமை) கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் 2வது கட்டப் பிரச்சாரத்திற்காக நேற்று மதுரை வந்த ஸ்டாலின், அழகிரிவீட்டிற்குச் சென்றார்.

தன்னுடைய மகன் உதயநிதியின் திருமண அழைப்பிதழை அழகிரியிடம் ஸ்டாலின் கொடுத்தார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் சுமார் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். ஆண்டிப்பட்டி தேர்தல் பிரச்சாரம்குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.

பிறகு காலை 11 மணிக்கு ஆண்டிப்பட்டிக்குப் பிரச்சாரத்திற்காக அழகிரி புறப்பட்டுச் சென்றார். ஸ்டாலின் மாலை 3மணிக்கு ஆண்டிப்பட்டிக்குக் கிளம்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+