பட்டாசு தயாரிப்பாளர்கள் பந்த் முழு வெற்றி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களைக் கண்டித்து சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சங்கம்சார்பில் நடந்த 24 மணி நேர பந்த் முழு வெற்றி பெற்றதாக சங்கத்தினர் கூறியுள்ளனர்.

பட்டாசுத் தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்துவதாக கூறி கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள்பிரசாரம் செய்து வருவதைக் கண்டித்து பந்த் நடத்த சிவகாசி பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சங்கம்முடிவு செய்தது.

இந்த தொண்டு நிறுவனங்களின் பொய்ப் பிரசாரத்தால் தங்களது வாழ்க்கை பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து 24 மணி நேர பந்த் நடத்த சங்கம் முடிவு செய்தது. அதன்படி விருதுநகர் மாவட்டம் முழுவதும்செவ்வாய்க்கிழமை பந்த் நடத்தப்பட்டது. சிவகாசி முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள்மூடப்பட்டிருந்தன. பஸ்களும், ஆட்டோக்களும் ஓடவில்லை.

தியேட்டர்களும் மூடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. பந்த் அமைதியாகவும்,எந்தவித பிரச்சினையும் இல்லாமலும் முடிந்தது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுத் தயாரிப்பாளர்கள் ஒரு இடத்தில் கூடி தங்களுக்கு எதிராக செயல்படும்தொண்டு நிறுவனங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+