சென்னை வைர வியாபாரி வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த வைர வியாபாரி வங்கியில் ரூ.6 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரைஅடுத்து, அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னையில் வைர வியாபாரம் செய்து வருபவர் குஜராத்தை சேர்ந்த ஷா. இவருக்கு டெல்லி, மும்பை, பெங்களூர்என்று இந்தியா முழுவதும் அலுவலகங்களும் வைர வியாபார நிறுவனங்களும் உள்ளன.
ஷா குடும்பத்தினர் தேசிய மயமாகக்கப்பட்ட ஆந்திரா வங்கியில் ரூ.6 கோடி கடன் வாங்கியுள்ளனர். ஆனால்கடனை திருப்பிச் செலுத்தவில்லை.
வங்கி அதிகாரிகள் இவரது குடும்பத்தினருக்கு பல்வேறு சலுகைகள் காட்டி, செக்யூரிட்டி இல்லாமலே இந்த கடனைவழங்கியதாக கூறப்படுகிறது. எனவே இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
ஷா குடும்பத்தினர் மோசடி செய்துள்ளதாக டெல்லி சி.பி.ஐ.க்கு வந்த புகாரையடுத்து சென்னையில் உள்ள ஷாகுடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இதே போல் டெல்லி, மும்பை உள்பட ஷா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகளிலும் போலீசார் ஒரே நேரத்தில்சோதனை நடத்தினர். ஆந்திரா வங்கி தவிர வேறு சில வங்கிகளிலும் அவரது குடும்பம் கணக்கு வைத்துள்ளது.இவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை வங்கி அதிகாரிகளின் வீட்டிலும் நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ஷாவின் மோசடிக்குஉதவியாக இருந்த அதிகாரிகள், ஷா குடும்பத்தினர் ஆகியோர் கைதாகலாம் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள்தெரிவித்தன.
நாடு முழுவதும் இதுபோன்ற சி.பி.ஐ. அதிரடி ரெய்டுகள் கடந்த 3 நாட்களாக நடந்து வருகின்றன. இவைதொடர்பாக 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விரைவில் கைதாவார்கள் என்று தெரிகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications