அன்சாரியை கொல்ல ஐ.எஸ்.ஐ.சதி
டெல்லி:
கொல்கத்தா அமெரிக்க மையம் தாக்கப்பட்டது தொடர்பாக கைதாகி உள்ள தீவிரவாதி அப்தாப் அன்சாரியைக்கொல்ல பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சதி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட அன்சாரி ஆள்கடத்தல், ஹவாலாமோசடி உட்பட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவன்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐதான் இவனைத் தயார் செய்து இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடஅனுப்பி வைத்தது. குஜராத்தில் ஆள்கடத்தல் தொடர்பாக இவனை, ராஜ்கோட் போலீசார் காவலில் வைத்துவிசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அன்சாரியைக் கொல்ல பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனம் சதியில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தில்உள்ள ஜஸ்ஸார் பகுதியில் வயர்லெஸ் செய்தியை குறுக்கிட்டு கேட்ட போது இந்த செய்தி கிடைத்துள்ளது.
அதன்படி கூலிப்படைகளை வாடகைக்கு அமர்த்தி அன்சாரியை கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் அன்சாரியிடம் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்தது. இவனின்வாக்குமூலத்தின் படி சர்தா பஜ்ரங் லால், புருஷோத்தம் தாஸ் குப்தா, ஜாவித் மன்சூர் ஆகியோரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.40 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications