அம்மாபட்டியான ஆண்டிப்பட்டி
சென்னை:
தமிழக முதல்வர்களை தேர்ந்தெடுக்கும் தொகுதி என்ற பெருமை ஆண்டிப்பட்டிக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
அதிமுகவின் கோட்டை என்ற வாதத்தை நிரூபித்துள்ளது ஆண்டிப்பட்டி. இதுவரை நடந்த தேர்தல்களில் ஐந்து முறை அதிமுகவேட்பாளர்களுக்கு வெற்றி தேடித் தந்துள்ளது ஆண்டிப்பட்டி. அதில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நியூயார்க்கில் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சட்டசபைக்குநடந்த பொதுத் தேர்தலில் அங்கிருந்தபடியே போட்டியிட முடிவு செய்தபோது அவர் தேர்வு செய்த தொகுதி ஆண்டிப்பட்டி.
காரணம், ஆண்டிப்பட்டி மக்கள் அவர் மீது வைத்திருந்து அளவு கடந்த அன்புதான். அதனால்தான் பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர். வராதநிலையிலும் கூட அவருக்கு ஓட்டுப் போட்டு மாபெரும் வெற்றி பெற வைத்தனர் ஆண்டிப்பட்டி மக்கள்.
அதே அன்பை இப்போது எம்.ஜி.ஆரின் வாரிசான ஜெயலலிதாவிடமும் காட்டியுள்ளனர் ஆண்டிப்பட்டி மக்கள். இதன் மூலம் மீண்டும் ஒருமுதல்வரை தேர்வு செய்துள்ளனர் இத் தொகுதி மக்கள்.
வெறும் தேவர் ஜாதி ஓட்டுக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறார் ஜெயலலிதா என்ற வாதமும் இதன் மூலம் தோற்றுப்போயுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஜாதியினரின் ஓட்டுக்களும் அவருக்கு விழுந்துள்ளதையே இந்த வெற்றி காட்டுகிறது.
ஆண்டிப்பட்டியின் இரண்டாவது பெரிய ஜாதியான நாயுடு மக்களின் வாக்குகளும், அதற்கு அடுத்த பெரிய ஜாதியானதாழ்த்தப்பட்டோரின் வாக்குகளும் கூட ஜெயலலிதாவுக்கே விழுந்துள்ளது. காரணம் இந்த இரு ஜாதிக்காரர்களின் ஓட்டுக்களை நம்பி நின்றமதிமுக வேட்பாளரும், புதிய தமிழகம் வேட்பாளரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி மக்கள் மிகத் தெளிவாக தங்களது பிரதிநிதியைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக ஜெயலலிதாநடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்போம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications