தேர்தல் கமிஷனை எதிர்க்க கட்சிகளுக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை:
தேர்தலை புறக்கணித்த கட்சிகளுக்கு ஆண்டிப்பட்டி பற்றி அக்கறை இல்லாமல் போனாலும், அடுத்து வரும்தேர்தல்களில் இந்த ஜனநாயக விரோத அடாவடித்தனத்துக்கு தேர்தல் கமிஷன் துணை நிற்காமல் பார்த்துக்கொள்ளும் அக்கறை இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்ட கட்டுரையில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் வெற்றியை நான் எதிர்பார்த்துஇருந்ததாக குறிப்பிட்டிருந்தார்கள். எதிர்பார்த்த ஒன்றுதான் என்று நான் நிருபர்களிடம் சொன்னதை முழுமையாகஆய்வு செய்யாமல் அப்படி எழுதி விட்டனர்.
எதிர்பார்த்த ஒன்று என்பதில் பல உட்கருத்துக்கள் உண்டு. எப்படி? என்னென்ன செய்து? அரசு இயந்திரத்தைஎப்படியெல்லாம் பயன்படுத்தி? தேர்தல் விதிமுறைகளை எப்படியெல்லாம் மீறி? போலீஸ் அதிகாரிகளை எப்படிமுடுக்கி விட்டு? இதுபோன்ற கேள்விகள் எல்லாம் அந்த ஒரே சொல்லில் அடங்கியுள்ளது.
தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு தேர்தலில் வாக்களிக்க 17வதாக ஒரு சான்றை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்தஅறிவிப்பால் போலி வாக்காளர்களின் வாக்குகளை எல்லாம் செல்லுபடியாகும் வாக்குகளாக ஆளுங்கட்சியினர்மாற்றிக் கொண்டனர்.
இந்த ஜனநாயக விரோத செயலுக்கு தேர்தல் கமிஷனும் துணை போயிருப்பதை பார்க்கும்போது, இந்தியஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று ஏங்கி பெருமூச்சு விடாமல் இருக்க முடிகிறதா?
நடுநிலையில் இருக்க வேண்டிய மத்திய, மாநில தேர்தல் கமிஷன்கள் இப்படி நடந்து கொள்ளும் என்றுஎதிர்பார்க்கவே இல்லை.
தேர்தலைப் புறக்கணித்த கட்சிகளுக்கு ஆண்டிப்பட்டி பற்றி அக்கறையில்லாமல் போனாலும், அடுத்து வரும்தேர்தல்களில் இந்த ஜனநாயக விரோத அடாவடித்தனத்துக்கு தேர்தல் கமிஷன் துணை நிற்காமல் பார்த்துக்கொள்ளும் அக்கறை வேண்டும் என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications