ஆளுநரைச் சந்தித்தார் ஜெ.
சென்னை:
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை முதல்வராகப் பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஇன்று (புதன்கிழமை) காலை சந்தித்தார். ஆனால் அமைச்சரவைப் பட்டியல் எதையும் ஆளுநரிடம் அவர்கொடுக்கவில்லை.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சட்டசபை அதிமுக தலைவராக ஜெயலலிதாதேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் முதல்வர் பன்னீர்செல்வமும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததையடுத்துஅவரைப் பதவியேற்க வருமாறு ஆளுநரும் அழைத்துவிட்டார்.
ஆனால் வரும் மார்ச் 2ம் தேதிதான் ஜெயலலிதா பதவியேற்கப் போவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. அவர்பதவியேற்பதற்காக சென்னை சேப்பாக்கம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வெகு வேகமாகத்தயாராகி வருகிறது.
புதிய அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா தயார் செய்து விட்டார் என்றும் அதை இன்று அவர் ஆளுநரிடம்சமர்ப்பிப்பார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்குச் சென்ற ஜெயலலிதா, ராம்மோகன் ராவைச்சந்தித்தார்.
தன்னை முதல்வராகப் பதவியேற்க அழைத்ததற்காக ஆளுநருக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். சுமார் 20நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் வெளியே வந்த ஜெயலலிதா, மரியாதை நிமித்தமாகத்தான் ஆளுநரைச் சந்தித்ததாகவும் புதியஅமைச்சரவை பட்டியலை அவரிடம் கொடுக்கவில்லை என்றும் நிருபர்களிடம் கூறினார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்பதில் சட்ட ரீதியாக உள்ள தடைகள் பற்றி ஆளுநரிடம் பேசினீர்களா என்றுநிருபர்கள் கேட்டதற்கு, சட்ட ரீதியாக எனக்கு எந்தவிதமான தடையும் இல்லை, அது பற்றி கேள்வியே எழவில்லைஎன்று ஜெயலலிதா பதிலளித்தார்.
இதையடுத்து மார்ச் 2ம் தேதி ஜெயலலிதா மட்டுமே முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என்றும் அமைச்சர்கள்அதன் பிறகு வேறொரு நாளில் பதவியேற்பார்கள் என்றும் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications