சாந்தகுமார் கொலை: ராஜகோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கொன்றதன் பின்னணியில் ஹோட்டல்சரவண பவன் அதிபர் ராஜகோபால் முக்கிய நபராக இருந்திருக்கிறார் என்று ராஜகோபால் மீது சென்னைபோலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 9-வது மெட்ரோபாலிடன் நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் முன்பு இந்த 10 பக்ககுற்றப்பத்திரிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தச் சொல்லியும், பின்னர் கொடைக்கானலில் வைத்து அவரைக் கொலைசெய்யும்படியும் தனது ஆட்களுக்கு ராஜகோபால்தான் உத்தரவிட்டுள்ளார்.
சாந்தகுமாரும் ஜீவஜோதியும் திருச்செந்தூருக்கு கட்டாயப்படுத்தி ராஜகோபாலால் அழைத்துச் செல்லப்பட்டனர்.அவரது வீட்டில் அக்டோபர் 24ம் தேதி வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு வைத்துதான் சாந்தகுமாரைக் கொல்வது என்ற முடிவுக்கு ராஜகோபால் வந்துள்ளார். ஜீவஜோதியைத்திருமணம் செய்து கொள்வதற்கு இடையூறாக சாந்தகுமார் இருந்ததால் அவரைக் கொலை செய்ய ராஜகோபால்முடிவு செய்தார்.
அக்டேபார் 26ம் தேதி ராஜகோபாலின் ஹோட்டலில் பணியாற்றும் சிலர் சாந்தகுமாரை ஒரு காரில் கடத்திச்சென்றனர். கொடைக்கானலில் வைத்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் உடலை மலைப்பகுதியில் போட்டு விட்டுச் சென்றனர் என்று அந்தக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொலை செய்தது, கொலைக்கு உதவியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ராஜகோபாலுக்கு எதிராககுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜகோபாலின் ஜாமீன் மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications