தமிழக-கேரள எல்லைப்புற வனப் பகுதியில் பயங்கர தீ
கோயம்புத்தூர்:
தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப் பகுதிகளில் சமீபத்தில் தீ காரணமாக 200 ஹெக்டேர் நிலம் அழியும்அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையார், வட்டப்பாறை, ஆத்துபதி, நடுப்பதி, சந்திராபுரம், பாரப்பட்டிவனப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று தீப்பிடித்தது.
இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த தீயை 8 இடங்களில் தலா 10 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர்தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.
ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வீசும் பலமான காற்றினால் தீயின் வேகம் அதிகரித்துள்ளது.இதனால் சனிக்கிழமை சுமார் 200 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகி நாசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதியில் பிடித்த தீயினால் பாரப்பட்டி உள்மலை, நடுப்பகுதி வன பகுதியில் உள்ள குடிசைகளை காலி செய்யகேரள வனத்துறை சனிக்கிழமை உத்தரவிட்டது. இதனால் இப்பகுதி மக்கள் 20க்கும் மேற்பட்ட குடிசைகளை காலிசெய்து மலை அடிவாரத்துக்கு வந்தனர்.
இன்னும் ஒரு வாரம் இந்த வனப்பகுதியில் தொடர்ந்து தீ எரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளப் பகுதியில் பிடித்த வனத் தீயால் கேரள வனப்பகுதியில் வசிக்கும் யானை, புள்ளி மான், கடமான், காட்டுஆடு, காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகள் வாளையார் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications