பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வரும்: பிரபாகரன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதால், இனப் பிரச்சனையையும் பேச்சுவார்த்தையின்மூலம் தீர்க்க முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் கூறியுள்ளார்.

இலங்கையில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர்நிறுத்தத்தை கண்காணிப்பதற்காகநார்வே ராணுவ தளபதி டிராண்ட் தலைமையிலான 18 பேர் அடங்கிய ஒரு சர்வதேச குழு இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த குழு பிரதமர் விக்கிரமசிங்கேயை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு, புதன்கிழமை இரவு கிளிநொச்சியில்பகுதியில்புலிகளின் ரகசிய இடத்தில் பிரபாகரனை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நீடித்தது.

இவர்களிடம் பேசியதற்கு பிறகு தமிழ்நெட் இணைய தளத்திற்கு பேட்டியளித்த பிரபாகரன் கூறியதாவது:

நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதை பார்க்கும்போது, பேச்சுவார்த்தையின் மூலம் இத்தனை வருடபிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு காரணமான இலங்கை பிரதமருக்கும், நார்வே குழுவினருக்கும் எனது நன்றி.

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் முக்கிய சாலையை திறந்து விடும்படி கண்காணிப்புக் குழுவிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன். இதனால் மக்களின் போக்குவரத்து சிரமம் குறையும்.

வன்னியிலிருந்து சென்று அகதியாக வசிப்பவர்கள் திரும்பவும் வன்னிக்கு வந்து வசிப்பதற்காக கண்ணிவெடிகளைநீக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். இதற்கு கண்காணிப்பு குழுவினர் உதவும்படி கேட்டுக்கொண்டோம் என்பிரபாகரன் கூறியுள்ளார்.

நிரந்தர போர் நிறுத்தத்தை கண்காணிப்பது என்பது மிகவும் கடினமானது என நார்வே குழு கூறியுள்ளது. ஆனால்,நாங்கள் ஒப்பந்தத்தை காப்பாற்றுவோம் என புலிகள் உறுதி அளித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன், தமிழேந்தி, புலித்தேவன் ஆகியோரையும்கண்காணிப்புக்குழுவினர் சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு கண்காணிப்புக்குழுவினர் மல்லாவியில்தங்கினர்.

பிறகு இன்று (வியாழக்கிழமை) காலை யானையிறவு பகுதிக்குச் சென்றனர். அங்கு விடுதலைப்புலிகள்மேற்கொண்டு வரும் கண்ணி வெடிகளை அகற்றும் பணியை பார்வையிட்டனர். இன்று மாலை இலங்கை ராணுவஹெலிகாப்டர் மூலம் கிளிநொச்சியிலிருந்து, கொழும்பு திரும்புகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பின் பிரபாகரன் அளித்துள்ள பேட்டி இது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+