இது பெண்கள் நல அரசு... கூறுகிறார் ஜெயலலிதா
சென்னை:
பெண்களின் நிலையை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தும் என்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டிவிடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) சர்வதேச மகளிர் தினமாகும். இதையொட்டி ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
பெண்கள் மற்றும் தொட்டில் குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்களை இந்த அரசு வகுத்துள்ளது. வரப் போகும் பட்ஜெட் உரையின்போது தமிழக அரசின் மகளிர் நலத் திட்டங்களை ஆளுநர் அறிவிப்பார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகவே இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அனைத்துமகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்பட்டன.
அரசுப் பள்ளிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. அதேபோல, 5 லட்சம் பெண்களுக்குசுய வேலைவாய்ப்புக்கான திட்டத்தையும் அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications