ஓய்வு பெறும் தமிழக ராஜ்ய சபா எம்.பிக்கள்
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்ய சபா எம்.பிக்களின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்தே வரும் 27ம் தேதி அந்தஇடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த பி. செளந்தரராஜன் மற்றும் நிறைகுளத்தான், திமுகவைச் சேர்ந்த ஆர். சிவா மற்றும் ஆர்.சுப்பையன் மற்றும் தமாகாவைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் ஆகிய 5 பேருடைய ராஜ்ய சபா எம்.பி. பதவிக்காலம் முடிவடைகிறது.
இவர்களைத் தவிர தற்போது தமிழக அமைச்சராக உள்ள என். தளவாய் சுந்தரம் கடந்த மே மாதம் நடந்தசட்டசபைத் தேர்தலின்போது எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால் அந்த இடம் ஏற்கனவே காலியாகத்தான் இருக்கிறது.
தமிழக சட்டசபையில் அதிமுக தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால் இந்த 6 இடங்களில் 4 இடங்கள் கட்டாயம்அந்தக் கட்சிக்கு உண்டு. தங்கத் தமிழ்செல்வன், வழக்கறிஞர் ஜோதி, சீ. பெருமாள் மற்றும் எஸ்.பி.எம். சையது கான்ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவுக்கும் கட்டாயம் ஒரு இடம் உண்டு. அக்கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான ஆர். சண்முகசுந்தரம்வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் தமாகாவின் பாடுதான் படு திண்டாட்டமாக இருந்தது. ஆனாலும் தேர்தலுக்குப் பின்னர் தங்கள் கட்சியுடன்சேர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தமாகாவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளது.
ஆனால் எந்தவிதமான நிபந்தனையையும் காங்கிரஸ் அளிக்கவில்லை என்று கூறும் தமாகா தலைவர் வாசனேமீதமுள்ள ஒரு இடத்துக்குப் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தவிர 2 கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவும் தமாகாவுக்குஉள்ளது.
34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் ராஜ்ய சபா எம்.பி. ஆகலாம் என்னும் தற்போதைய நிலையில், கடைசிநேரத்தில் எந்தவிதமான மாற்றமும் நிகழாமல் இருந்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 6 வேட்பாளர்களும்ராஜ்ய சபாவுக்குப் போவது உறுதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications