தூண் தானம் எங்கே நடைபெறும்? - "பரம ரகசியம்"
அயோத்தி:
அயோத்தியில் நாளை (வெள்ளிக்கிழமை) தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி எங்கே நடைபெறும் என்பது பரமரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்சிடம் கேட்டபோது,அதை நான் இப்போது சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார்.
அந்தத் தூண்களாவது எங்கே இருக்கிறது என்று சொல்லுங்களேன் என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதையும்சொல்ல பரமஹம்ஸ் மறுத்து விட்டார்.
அதைப் பற்றிய விவரங்களைச் சொன்னால் எதிரிகள் எச்சரிக்கையாகி விடுவார்கள். அதனால் அந்தத் தூண் பற்றியஎந்த விவரத்தையும் நான் சொல்ல மாட்டேன். நாளை நாங்கள் அந்தத் தூணை எங்கிருந்து கொண்டு வருவோம்என்று நீங்களே நேரில் பார்க்கத்தானே போகிறீர்கள் என்றும் பரமஹம்ஸ் கூறினார்.
ஆனாலும் தூண் பற்றிய சில விவரங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பைச் சேர்ந்த சிலர்தெரிவித்தனர்.
சரியாக ஐந்து அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட அந்தத் தூண், ஆறு அங்குல தடிமன் கொண்டுஇருக்கும் என்று கூறப்படுகிறது.
தூண்கள் தயாரிக்கப்படும் "காரியசாலை"யும் (வொர்க் ஷாப்) வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாகத்தெரிகிறது. தற்போது எங்கு அந்தத் தூண்கள் தயார் செய்யப்படுகின்றன என்றும் யாருக்கும் தெரியவில்லை.
இதனால்தான் அந்தத் தூண் எங்கிருந்து கொண்டுவரப்பட்டு, எங்கு வைத்து தானமாக வழங்கப்படும் என்றுவெளியில் யாருக்குமே தெரியாமல் உள்ளது.
அந்தத் தூணுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, மார்ச் 15ம் தேதி (நாளை) கட்டாயம் வெளியே கொண்டுவருவோம், அப்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்று வி.எச்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications