திமுக விஐபிக்கள் வீடுகளில் விடியவிடிய சோதனை
சென்னை:
மாநிலம் முழுவதும் தி.மு.க. முக்கியப் புள்ளிகளின் வீடுகளில் இரவு முழுவதும் விடிய விடிய ரெய்ட் நடந்தது.
மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த ரெய்ட்களை நடத்தினர். வருமானத்துக்கு மீறி சொத்துக்களை குவித்துள்ளதாகக் கூறி இந்தரெய்ட்கள் நடத்தப்பட்டன. இவர்களின் வீடுகளில் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.
ரெய்ட் நடத்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் அண்ணாநகரில் உள்ள பொன்முடியின் வீட்டை இரவு 8 மணிக்குத் தட்டிய போலீசார் உள்ளே புகுந்து டாய்லெட் முதல்சமையல் அறைவரை ஒரு இடத்தையும் விடாமல் சோதனை நடத்தினர். சில ஆவணங்களையும் கைப்பற்றினர். ரெய்ட் விவரம் உடனடியாகபோலீஸ் தலைமையகத்துக்குத் தெரிவித்தவண்ணம் இருந்தனர்.
வெளியில் சென்றிருந்த பொன்முடி ரெய்ட் விவரம் அறிந்து காரில் படுவேகமாக வந்திறங்கினார். ஆனால், அவர் வெளியிலேயே தடுத்துநிறுத்தப்பட்டார். அவருடன் வந்த திமுக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனுக்கும் போலீசுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது.அவர் எவ்வளவோ வாதாடியும் அவரை வீட்டுக்குள் விட போலீசார் மறுத்துவிட்டனர்.
மதுரை முன்னாள் மேயர் வீட்டில்....
இதே போல மதுரையின் முன்னாள் திமுக மேயரின் வீட்டிலும் இரவு 8 மணிக்கு ரெய்ட் தொடங்கியது.இதையறிந்து நூற்றுக்கணக்கான திமுகவினர் அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். ஆனால், அனைவரையும் போலீசார்தெருமுனையிலேயே நிறுத்தி திருப்பி விரட்டினர்.
மதுரையின் அமைதியான பகுதியான அண்ணாநகரில் உள்ள இவரது வீட்டுக்கு முன் 5 வேன்களில் போலீசார்வந்திறங்கியவுடனேயே அவர் கைது செய்யப்பட உள்ளார் என்ற வதந்தி பரவியது. ஆனால், ரெய்ட் நடத்தவந்துள்ளோம் என்று போலீசார் விளக்கியதையடுத்துத் தான் அவரது வீட்டினர் அமைதியடைந்தனர்.
இவரது வீட்டில் நள்ளிரவு 2 மணி வரை ரெய்ட் நடந்தது. பல ஆவணங்களும் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
போலீசார் சென்றவுடன் நிருபர்களிடம் பேசிய குழந்தைவேலு,
இது பழிவாங்கும் நடவடிக்கை. இதை நீதிமன்றத்தில் சந்திப்பேன். வீட்டுக்குள் அடாவடியாய் நுழைந்தார்கள். சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றார்கள். இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.
அந்தியூர் செல்வராஜ் கிராம வீட்டில்...
இதேபோல ஈரோடு மாவட்டம் நல்லாங்குளம் கிராமத்தில் நேற்றிரவு போலீஸ் வேன்ககளும் ஜீப்களும் நுழைந்தபோது அந்த கிராமமேஅதிர்ச்சியில் உறைந்தது.
நேராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் வீட்டின் முன் நின்ற போலீசார் திமுதிமுவென உள்ளே நுழைந்தனர். ரெய்ட் நடத்தவந்துள்ள விவரத்தைத் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் இன்னொரு குழு அவரது மகன் பரமசிவத்தின் வீட்டிற்குச் சென்றது.
இரு வீடுகளிலும் அதிகாலை 3 மணி வரை சோதனைகள் நடந்தன.
பூட்டியிருந்த சமயநல்லூர் செல்வராஜ் வீடு:
அதே போல மதுரையில் உள்ள முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜின் வீட்டில் சோதனைக்காக ஒரு குழு சென்றது. ஆனால், அங்கு வீடு பூட்டியிருந்ததால் அக்கம்பக்கத்தில் அவர்கள் எங்கே சென்றுள்ளனர் என்றுவிசாரித்தனர்.
யாருக்கும் எந்தத் தகவலும் தெரியாததால் அந்த போலீஸ் குழு வெகு நேரம் நின்றுவிட்டு திரும்பிச் சென்றது.
தூத்துக்குடியில்...
தூத்துக்குடி முன்னாள் எம்.எல்.ஏவும் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவருமான பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமானஹோட்டல்களிலும் இரவு முழுவதும் ர்ெய் நடந்தது.
அவரது மகளின் வீட்டையும் போலீசார் விடவில்லை. பஞ்சாயத்துத் தலைவியாக உள்ள பெரியசாமியின் மகள் கீதா ஜீவனின் வீட்டிலும்அதிரடி சோதனை நடந்தது.
இது குறித்து பெரியசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது,
என்னத்த சொல்றது. என்ன ஆட்சி நடக்குதுன்னு தெரியும். எதுக்காக சோதனை நடத்துறாங்கன்னும் தெரியும். பழி வாங்கும் நடவடிக்கைதான் இது. இத்தனை பேர் இருக்கும்போது என் வீட்டில் ஏன் ரெய்ட் நடத்துனாங்கன்னு புரியல என்றார்.
நாகர்கோவிலில்...
அதே போல நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தின் அருகே உள்ள முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனின் வீடும் சோதனையில் இருந்து தப்பவில்லை. அவரது வீட்டில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வந்தஇரு லஞ்ச ஒழிப்புப் போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர்.
இந்த அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ரெய்டையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். எந்தவித கலாட்டாவும் ஏற்பட்டு விடாமல்தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல முக்கிய இடங்களில் இரவு முழுவதும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னையில் முக்கிய திமுக பிரமுகர்களின் வீடுகள் உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
இந்த ரெய்டுகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications