பழிவாங்க ஆரம்பித்து விட்டார் ஜெ.: இளங்கோவன்
ஈரோடு:
திமுக பிரமுகர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்த ஆரம்பித்திருப்பது மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதாதன்னுடைய பழிவாங்கும் நடவடிக்கையைத் துவக்கி விட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்கூறினார்.
ஈரோட்டில் நிருபர்களிடன் இளங்கோவன் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல்ஏற்பட்டதன் எதிரொலியாகவே இந்தத் திடீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஜெயலலிதா இந்தச் சோதனைகளை நடத்தச் உத்தரவிட்டுள்ளார் என்றுஇளங்கோவன் கூறினார்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லக்கண்ணு ஆகியோரும் இந்தச்சோதனை நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டம் கடமையை செய்ய வேண்டும் - வெங்கையா:
இதற்கிடையே இந்த ரெய்டுகள் குறித்து சட்டம் தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும் என்று மத்திய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
இருந்தாலும், பழி வாங்கும் நடவடிக்கையாக இந்தச் சோதனைகள் அமைந்துவிடக் கூடாது என்றும் நாயுடுசென்னையில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications