ஒரிசா சட்டசபை தாக்குதல்: மக்களவையில் அமளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஒரிசா சட்டசபை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) மக்களவையில் பெரும் அமளிஏற்பட்டது.

விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை ஒரிசா சட்டசபையைப் பயங்கரமாகத்தாக்கினர். இதனால் சட்டசபைக் கட்டடம் பெரும் சேதமடைந்தது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் மக்களவையில் எதிரொலித்தது. இன்று காலை கூட்டம் தொடங்கியவுடனேயே,ஒரிசா சட்டசபை தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றுகோரி எதிர்க் கட்சிகள் கூச்சல் எழுப்பினர்.

ஆனால் பாஜக எம்.பிக்கள் இதற்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் இந்தப் பிரச்சனை குறித்து கேள்விநேரத்தில்தான் பேச வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆனால் கேள்வி நேரத்தை நீக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவ கெளடா, காங்கிரஸ் உறுப்பினர்சிவராஜ் பாட்டீல், மார்க்சிஸ்ட் உறுப்பினர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் சமாஜ்வாடி உறுப்பினர் ராம்ஜி லால் சுமன்ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், இது முக்கியமான விஷயம் என்று கூறிய மக்களவைத் துணை சபாநாயகர் பி.எம். சயீது, இதைப் பற்றிசுருக்கமாகப் பேசுமாறு அவர்களை அழைத்தார்.

இதைத் தொடர்ந்து வி.எச்.பி. மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினரைத் தாக்கி சட்டர்ஜி பேச ஆரம்பித்தார். இவற்றைக்கடுமையாக ஆட்சேபித்த பாஜக உறுப்பினர்கள், உடனடியாகக் கேள்வி நேரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றுகோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சொற்போர் நடந்தது. இதைத் தொடர்ந்து பெரும்அமளி ஏற்பட்டதையடுத்து, இன்று நண்பகல் வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் மக்களவை கூடியபோது, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ஒரிசாசட்டசபை தாக்கப்பட்டது குறித்து முழுமையான விவாதம் நடத்த வேண்டும் என்றும் இதுகுறித்து நீதிமன்றவிசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இறந்து விடுவேன் - வாஜ்பாய்

இதற்கிடையே, ராஜ்ய சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் வாஜ்பாய், ஒரிசாசட்டசபை தாக்கப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

வி.எச்.பி. மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் ""அடல் பிஹாரி வாஜ்பாய், ஜிந்தாபாத்"" என்று கோஷம் எழுப்பிக்கொண்டேதான் ஒரிசா சட்டசபையைத் தாக்கினர் என்று எதிர்க் கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினார்.

இதற்குப் பதிலளித்த வாஜ்பாய், இதுபோல் "ஜிந்தாபாத்" போடும் மனிதர்களை நான் என்றுமே விரும்பியதில்லை.இப்படி ஒரு செயலைச் செய்வதற்குப் பதில் நான் இறந்து விடுவேன் என்று கூறினார்.

அயோத்தியில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் குறித்தும்வாஜ்பாய் கவலை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+