செருப்பு தந்தால் சொத்து தருவீர்களா? - கருணாநிதிக்கு பொன்னையன் சவால்
சென்னை:
செருப்புகளுக்குப் பதில் சொத்துக்களை தருவீர்களா என்று கருணாநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக நிதிஅமைச்சர் பொன்னையன்.
இதுதொடர்பாக பொன்னையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட செருப்புகளுக்கு, திமுக அமைச்சர்கள் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்டசொத்துக்கள் ஈடாகுமா என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த சோதனையின்போது 700 ஜோடி செருப்புகளைக் கைப்பற்றியதாக திமுக அரசுவிளம்பரம் செய்தது. ஆனால் ஒரு ஜோடி செருப்பைக் கூட கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்யவில்லை.
அந்த 700 ஜோடி செருப்புகளை நாங்கள் கருணாநிதியிடம் கொடுக்கிறோம். அதற்குப் பதிலாக முன்னாள்அமைச்சர்களின் சொத்துக்களைத் தர அவர் தயாரா?
திமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் செய்துள்ள ஊழல்களை அறிந்து கொள்ள கருணாநிதி அவசரம்காட்ட வேண்டாம். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இப்போதுதான் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு அவருக்கு முழு விவரம் தெரிய வரும். அதுவரை அவர் பொறுமை காக்க வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் பொன்னையன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications