லண்டன் ஓட்டல் வழக்கு: மொழிபெயர்ப்பு கோரி சசிகலா புது மனு
சென்னை:
அதிகாரப்பூர்வமான மொழிப் பெயர்ப்பாளர்களை வைத்து, லண்டன் ஓட்டல் வழக்கு தொடர்பான ஆவணங்களைமொழி பெயர்க்க உத்தரவிட வேண்டும் என்று சசிகலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
லண்டனில் நட்சத்திர ஓட்டலை வாங்கி விற்றதன் மூலம் ரூ.43 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக முதல்வர்ஜெயலலிதா, தினகரன் எம்.பி., சசிகலா, இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சமீபத்தில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து முதலாவது தனி நீதிமன்றத்துக்குமாற்றப்பட்டது. இந்த வழக்கு ஆவணங்களை தமிழில் வழங்கக் கோரி சசிகலா, இளவரசி ஆகியோர் மனுத்தாக்கல்செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன், அவர்களுக்கு தமிழில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கொடுக்க உத்தரவிட்டார். தற்போது ஆவணங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி மும்முரமாகநடந்து வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை சசிகலா தரப்பில் முதலாவது தனிநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணியில் 12 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த 12 பேரில் யாரும் யாரும்அதிகாரப்பூர்வமான மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை.
எனவே தகுதி வாய்ந்த, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டு, வழக்குதொடர்பான ஆவணங்களை மொழி பெயர்க்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு மீதான உத்தரவை இன்று (செவ்வாய்க்கிழமை) பிறப்பிப்பதாக நீதிபதி ஆறுமுகபெருமாள் தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications