விரைவில் வருகிறது அடுத்த இடைத் தேர்தல்
சென்னை:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய சட்டசபைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டுவரைவு வாக்காளர் பட்டியல் தயாராகி உள்ளது. இதையடுத்து மே மாதத்தில் இந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தல்நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் போலிவாக்காளர் பிரச்சினை காரணமாக முதல் இரண்டு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டியில் மட்டும் பரபரப்பாக இடைத் தேர்தல் நடந்தது. அங்கு ஜெயலலிதா போட்டியிட்டு தமிழகமுதல்வரானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும்பணிக்கு உத்தரவிடப்பட்டது. இந்தப் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இந்தத் தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது தயாராகியுள்ளது. அது ஏப்ரல் 3ம் தேதிவரை வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் அதற்குவிண்ணப்பிக்கலாம்.
திருத்தங்களுக்குப் பிறகு ஏப்ரல் 25 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அநேகமாக மே மாதத்தில் சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிரப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும்இடைத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் தேர்தல் நடக்கலாம் என்று இன்று (புதன்கிழமை) தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் கமிஷனர்மிருத்யுஞ்சய் சாரங்கி, ஆனாலும் இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications