பாலன் "கொலை" வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: கருணாநிதி
சென்னை:
கொல்லப்பட்டு விட்டதாக கூறப்படும் பாலன் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், தற்போது திமுகவைச் சேர்ந்தவருமான எம்.கே.பாலன் கடந்த டிசம்பர் 30ம்தேதியிலிருந்து காணவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பாலன் கொலை செய்யப்பட்டு விட்டதாகதற்போது தெரிவித்துள்ளனர்.
ஆனால் பாலன் சாகவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். வழக்கை திசை திருப்புவதற்காக போலீசார்நாடகமாடுகின்றனர் என்று பாலனின் மகன் மணிமாறன் கூறியுள்ளார். இது குறித்து திமுக தலைமையகத்தில்கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
பாலன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதை கண்டு பிடித்து கூறுவது தமிழக அரசின்கடமை.
இந்தக் குழப்பங்களைத் தீர்க்க வேண்டும் என்றால் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திமுக ஆட்சியில் கடத்தல்காரர்கள், தீவிரவாதிகளின் தொலைபேசிகள்தான் ஒட்டுக் கேட்க உத்தரவிடப்படும்.ஆனால் அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்று கருணாநிதிகூறினார்.












Click it and Unblock the Notifications