நெய்வேலி நிறுவனம் தனியார் மயமாகாது: வாஜ்பாய் உறுதி - ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி:
நெய்வேலி அனல்மின் நிறுவனம் (என்.எல்.சி.) தனியார் மயமாகாது என்று பிரதமர் வாஜ்பாய்உறுதியளித்ததையடுத்து, அந்நிறுவன ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இப்பிரச்சனை குறித்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அனுப்பிய கோரிக்கை மனுவை நேற்று(புதன்கிழமை) இரவு வாஜ்பாயிடம் வழங்கி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவருடன் ஆலோசனைநடத்தினார்.
தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துக் கூறிய வைகோ, உங்கள் ஆட்சிக்காலத்தின்போது இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கும் தவறு நடந்துவிடக் கூடாது என்றும் வாஜ்பாயிடம்தெரிவித்தார்.
இதையடுத்து என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாக்கப்படாது என்று வைகோவிடம் வாஜ்பாய் உறுதியளித்தார்.
வாஜ்பாயின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, நெய்வேலியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதொழிற்சங்கங்கள் புதன்கிழமை இரவு தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதற்கிடையே தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த என்.எல்.சி. நிறுவனத் தலைவர் சஹாய், பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் கடலூர் மாவட்ட கலெக்டர் தங்கசுவாமியும் கலந்துகொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடியவே, ஸ்டிரைக் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாகஅறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்றைய இரவு ஷிப்டுக்கான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத்திரும்ப, என்.எல்.சி. நிறுவனத்தில் மின் உற்பத்தி முழு வீச்சில் மீண்டும் தொடங்கியது.
இதனால் பெரும் மின் தடை பாதிப்பிலிருந்து தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து தென்னிந்திய மாநிலங்களும்தப்பித்தன.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications