இமாம் அலி கைதா? - நாகர்கோவிலில் பரபரப்பு
நாகர்கோவில்:
மதுரை அருகே தப்பிச் சென்ற அல்-உம்மா கைதியான இமாம் அலி நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டதாக வந்ததகவலையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 7ம் தேதி மதுரை அருகே திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால்சுட்டும் ஹைதர் அலி மற்றும் இமாம் அலி ஆகிய அல்-உம்மா கைதிகளையும் சிலர் கடத்திச் சென்றனர்.
ஆனால் அடுத்த இரண்டு நாட்களிலேயே சிவகங்கையில் ஹைதர் அலி பிடிபட்டான். இச்சம்பவம் தொடர்பாக10க்கும் மேற்பட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடை யே இன்னும் "தண்ணி" காட்டிக் கொண்டிருக்கும் இமாம் அலியைத் தேடி, தமிழகம் முழுவதும்போலீசார் வலை விரித்துள்ளனர். தமிழக-கேரள எல்லையிலும் 7 சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார்தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் போலீசார் நேற்று (வியாழக்கிழமை) இரவுவாகனங்களைச் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நார்கோவில்-திருச்சி பஸ்சிலும் போலீசார் சோதனை செய்தபோது, இமாம் அலி போன்ற தோற்றத்துடன்ஒருவன் பிடிபட்டான். மொட்டைத் தலையுடனும் லேசான தாடியுடனும் இருந்த அவன், போலீசாரைக் கண்டதும்திருதிருவென்று முழித்தான்.
உடனே அந்த நபரைப் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போதுஅவன் பெயர் சவுந்தரபாண்டியன் என்பதும், அவன் மதுரையைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது.
ஆனாலும் அவன் பெயரை மாற்றிச் சொல்கிறான்ோ என்று சந்தேகப்பட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தஅவனைத் திருநெல்வேலிக்குக் கொண்டு சென்றனர்.
இதற்கிடையே பிடிபட்டவன் இமாம் அலிதான் என்ற செய்தி காட்டுத் தீ போலப் பரவியதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications