கிள்ளியூர் எம்.எல்.ஏ. தமாகாவிலிருந்து நீக்கம்: வாசன் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் கட்சியுடன் இணைவதைக் கடுமையாக எதிர்த்து வந்த தமாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ்,அக்கட்சியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

காங்கிரசுடன் தங்கள் கட்சி இணைவதை எதிர்த்து பல தமாகா தலைவர்கள் போர்க்கொடி எழுப்பி வந்தனர்.

காங்கிரசை எதிர்த்து தன்மானத்துடன் செயல்படுவதற்காகவே மறைந்த மூப்பனாரால் தமாகா உருவாக்கப்பட்டது.ஆனால் மூப்பனாரின் இந்தச் செயலுக்கு மாறாக காங்கிரசுடன் சேர்ந்தால் அது பெருத்த அவமானமாகும் என்றுடாக்டர் குமாரதாஸ் சமீப காலமாகக் கூறி வந்தார்.

மேலும், தமாகாவில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால், காங்கிரசுடன் இணைப்பு இல்லை என்றுகட்சித் தலைமை சொல்லட்டும் என்றும் டாக்டர் குமாரதாஸ் நேரடியாகவே சவால் விடுத்தார். தனக்கு 15 தமாகாஎம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தமாகாவிலிருந்து டாக்டர் குமாரதாஸ் நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவரான ஜி.கே. வாசன்இன்று அறிவித்தார்.

தேவையில்லாமல் கட்சியின் உள் விவகாரங்களை எல்லாம் வெளியிட்டு வருவதால் கட்சியின் அடிப்படைஉறுப்பினர் பதவியிலிருந்து அனைத்துப் பொறுப்புக்களிலுமிருந்து டாக்டர் குமாரதாஸ் நீக்கப்பட்டுள்ளதாகவும்வாசன் தெரிவித்தார்.

கட்சி விவகாரங்களை வெளியில் பேச வேண்டாம் என்று பல முறை கூறியும் டாக்டர் குமாரதாஸ் அதை மீறிச்செயல்பட்டதாகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் கூறிய வாசன், இதனால்தான் அவரைக்கட்சியிலிருந்து நீக்கியதாகக் கூறினார்.

இதனால் டாக்டர் குமாரதாசுடன் தமாகாவினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் வாசன்உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர்குமாரதாஸ், அதிமுகவின் தூண்டுதலின் பேரில்தான் கட்சியை எதிர்த்து வந்ததாகத் தமாகா வட்டாரங்கள் கூறின.

"கட்சியிலிருந்து என்னை வெளியேற்றும் அளவிற்கு பெரிய பாவத்தை ஒன்றும் நான் செய்துவிடவில்லை.கட்சியிலுள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துக்களை நான் வெளிப்படுத்தினேன், அவ்வளவுதான்.அடுத்தகட்ட நடவடிக்கையை இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பேன்" என்று பின்னர் நிருபர்களிடம் டாக்டர்குமாரதாஸ் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+