தமிழக பாஜகவுடன் உறவு இல்லை: கருணாநிதி
சென்னை:
தமிழக பாஜகவுடன் உறவு முறிந்து விட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை)கூறினார்.
திமுக பொதுக்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதிபேசியதாவது:
தமிழகத்தில் இருக்கும் பாஜகவினர் அதிமுகவை ஆதரிக்கிறார்கள். சட்டசபையில் அவர்களை புகழஆரம்பித்துள்ளனர். கவர்னர் உரைக்கு பாராட்டு மழை பொழிகின்றனர்.
இதைப்பற்றி கேட்டால், திமுகவுடன் உறவு வைத்துள்ளதாகவும், அதிமுகவுடன் நட்பு வைத்துள்ளதாகவும்கூறுகின்றனர். அவர்களது பாணியிலேயே திமுக மத்தியில் உள்ள பாஜகவுடன் உறவும், தமிழக பாஜகவுடன் நட்பும்வைத்துக் கொள்ளும்.
தமிழக பாஜகவினருக்கு ஒன்று மட்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். 3 மாதங்களுக்கு முன்பு தான் பிரதமர்வாஜ்பாய் கொடும்பாவியை, சட்ட அமைச்சராக இருந்த பொன்னையன் முன்பாகவே அவர்கள் எரித்தனர்.
மாவட்டந்தோறும் நிகழ்ந்த அந்த நிகழ்வுகளை மீண்டும் நீங்கள் சந்திக்க நேரிடும். இது சாபம் அல்ல. அறிவுரைதான் என்று பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.
பின்னர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே மதிமுகவுக்கும், எங்களுக்கும் ஒத்துப் போகவில்லை. கோவைமாநகராட்சித் தேர்தலில் பாஜகவை எதிர்த்து மதிமுக போட்டியிட்டது.
எனவே தமிழகத்தைப் பொறுத்த வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி இருப்பதாக கூறுவதில் அர்த்தமில்லை.இடைத் தேர்தலை பொறுத்தவரை அவர்களே கூட்டணிப் பற்றி சொல்லட்டும்.
திருநீறு பூசுவதை மூட நம்பிக்கை என்று நான் சொல்லாததை சொன்னதாக எடுத்துக் கொண்டு பாஜகவினர்பேசுகின்றனர். இவர்கள் தான் இந்து மதத்தையே காப்பாற்றுவது போல், நான் பேசாததற்கு கண்டனம்தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியில்லை, அவர்கள் பாணியில் நட்பு தான். இந்த முடிவு எடுப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்று கருணாநிதி கூறினார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications