அதிகாரிகளை கடத்த வீரப்பன் திட்டம்?
கொள்ளேகால்:
கொள்ளேகால் அருகே மலைப்பகுதியில் வீரப்பன் வாகனங்களை நோட்டம் விட்டிருப்பதாகக் கூறும் கர்நாடகப்போலீசார், அதனால் அவன் அதிகாரிகளை கடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
வீரப்பனைப் பிடிக்க கர்நாடக, தமிழக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள கெஜ்ஜலு குட்டா மலைஉச்சியில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேர் ஆயுதங்களுடன் இருந்துள்ளதாகவும் அந்த மலைஉச்சியில் இருந்து கவுதள்ள ரோட்டில் செல்லும் வாகனங்களை கண்காணித்துக் கொண்டு இருப்பதாகவும்அதிரடிப்படையினரிடம் சில மாடு மேய்ப்பவர்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே அதிரடிப்படை போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அப்பகுதியில் யாரும்சிக்கவில்லை.
சதாசிவம் கமிஷன் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, வீரப்பன் வாகனங்களை கண்காணித்து உள்ளதுதற்போது தெரிய வந்துள்ளது. இதனால் அவன் முக்கிய அதிகாரிகளை கடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்றுஅதிரடிப் போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து வீரப்பனை தேடும் வேட்டை தீவிரமடைந்துள்ளது. இதே போல் ஒகேனக்கல், ஏரியூர், மேட்டூர்,பாலாறு, காவேரிபுரம், அந்தியூர் வனப்பகுதியிலும் அதிரடிப்படையினர் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications