கோவை குண்டு வெடிப்பு கைதிகள் திடீர் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைதாகி சிறையில் உள்ள கைதிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை)திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மாதத் துவக்கத்தில் மதுரை அருகே ஹைதர் அலி மற்றும் இமாம் அலி ஆகிய இரண்டு அல்-உம்மா கைதிகள்போலீசாரிடமிருந்து தப்பித்தனர்.
இதையடுத்து, ஒரு ஊரில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளை மற்ற ஊர்களில் உள்ள நீதிமன்றங்களுக்குக்கொண்டு செல்வதற்குத் தமிழக அரசு சமீபத்தில் தடை விதித்தது.
இத்தடையைக் கண்டித்து கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகக் கைதாகி சிறைகளில் உள்ள160க்கும் மேற்பட்ட கைதிகளும் நேற்று மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைதிகளின் போராட்டம் நேற்று இரவு வரை தொடர்ந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications