புதுவை பட்ஜெட்: 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி இன்று (வியாழக்கிழமை) பட்ஜெட்டை வாசிக்கத்தொடங்கியவுடனேயே 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாண்டிச்சேரி மாநில நிதியமைச்சருமான ரங்கசாமி இன்று 2002-03ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல்செய்தார்.
ரங்கசாமி பட்ஜெட்டை படிக்கத் தொடங்கியவுடன், அதிமுக எம்.எல்.ஏ.க்களான அன்பழகன் மற்றும் காசிலிங்கம்ஆகிய இருவரும் இருக்கையிலிருந்து எழுந்து பஸ் கட்டண உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினர்.
ஆனால் அதற்கு சபாநாயகர் ராமச்சந்திரன் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து சபையின் மையப்பகுதிக்கு அதிமுகஎம்.எல்.ஏக்கள் இருவரும் சென்று கோஷம் எழுப்பினர்.
தங்களுடைய இருக்கைக்கு சென்று உட்காருமாறு சபாநாயகர் கூறியதை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.பின்னர் சிறிது நேரம் கழித்து இருவரும் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதன் பிறகு முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தொடர்ந்து வாசிக்க தொடங்கினார். இந்த பட்ஜெட்டில் பஸ் கட்டணஉயர்வு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications