மதிமுகவை தடை செய்ய வேண்டும்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்தஅனுமதி கோரும் வைகோ தலைமையிலான மதிமுகவைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கூறினார்.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கம் உடல் நலம் சரியில்லாதவர் என்றால், அவர்தங்கியிருக்கும் லண்டனிலேயே பேச்சுவார்த்தையை நடத்தலாமே? சென்னைக்கு ஏன் வர வேண்டும்?

இந்தியாவில் புலிகளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு கட்சிகளும் எதிர்த்து வரும்நிலையில் வைகோ மட்டும் மீண்டும் மீண்டும் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.இதன் மூலம் அவர் புலிகளிடம் விலை போய் விட்டார் என்றுதான் தெரிய வருகிறது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பை வைகோ ஆதரிப்பதால் அவரையும் அவருடையமதிமுக கட்சியையும் தடை செய்ய வேண்டும் என்று அவ்வறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+