உண்ணாவிரதம் இருந்த குவைத் பெண் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் சிறையில் தொடர்ந்து 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த குவைத் பெண் தலால் ஆஸ்மிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குவைத்தை சேர்ந்த ஆஸ்மி தனது காதலன் காதர் பாட்ஷாவுடன், போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த போது,சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தன்னை திரும்பவும் குவைத்துக்கு அனுப்ப வேண்டாம் என்றும் தனது காதலனை திருமணம் செய்து கொண்டுஇந்தியாவிலேயே தங்கப் போவதாகவும் கூறும் ஆஸ்மி, தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

ஆனால் போலீஸ் நிலையத்தில் வந்து ஒழுங்காகக் கையெழுத்துப் போடாததால், கடந்த 27ம் தேதி சிறையில்அடைக்கப்பட்டார் ஆஸ்மி. அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி காதலன் தாக்கல் செய்த மனுவையும் சென்னைஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட ஆஸ்மி, தன்னைத் தன் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிகடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதையடுத்து அவருடைய உடல் நிலை மோசமானது.

மேலும் அவர் கர்ப்பிணியாக இருப்பதால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிறைத்துறைஅதிகாரிகளிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஸ்மி வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்மி இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றுபல்வேறு சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவும் அவரைஇந்தியாவிலேயே தங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தன்னை திரும்பவும் குவைத்துக்கு அனுப்ப முயற்சித்தால், தான் இங்கேயே உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக ஆஸ்மி கூறியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+