ரஜினி வீட்டு முன்பு விஷ பாட்டிலுடன் நாடகமாடிய ரசிகர் கைதாகி விடுதலை
சென்னை:
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன்பு விஷம் குடிப்பதாக நாடகமாடிய ரசிகரை போலீசார் கைது செய்துபிறகு விடுவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை போயஸ் கார்டனில் ரஜினி வீடு உள்ளது. அவரை பார்க்க தினமும் தமிழகம்முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வருவது வழக்கம்.
நேற்றும் (வெள்ளிக்கிழமை) பகலில் வழக்கம் போல் ரஜினி வீட்டு முன்பு ஏராளமான ரசிகர் கூடி இருந்தனர்.அப்போது திடீரென்று ஒரு ரசிகர் தன் கையில் பாட்டிலை வைத்துக் கொண்டு விஷம் குடிக்கப் போவதாக கூறினார்.
உடனே அங்கே கூடியிருந்த மற்ற ரசிகர்கள் அவரை பிடித்துக் கொண்டனர். தகவல் கிடைத்து வந்ததேனாம்பேட்டை போலீசார் அந்த ரசிகரை பிடித்து சென்றனர். விசாரணையில் அந்த ரசிகரின் பெயர் பாஸ்கரன்என்றும், சென்னை சாலிகிராமத்தில் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரியாணி கடையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், ரஜினியை சந்தித்து பண உதவி கேட்பதற்காக ரஜினிவீட்டிற்கு வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் வைத்திருந்த பாட்டிலில் விஷம் ஏதும் இல்லை என்றும் போலீசார்கூறினர்.
விஷம் குடிப்பதாகக் கூறினால், ரஜினியை நேரில் பார்க்க முடியும் என்பதற்காக அவர் அந்த மாதிரி கூறியுள்ளார்.பிறகு அந்த ரசிகரை போலீசார் எச்சரித்து விடுவித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications