இலங்கை அமைதிப் பேச்சு: சென்னையில் நடத்த வைகோ கோரிக்கை
சென்னை:
இலங்கை இனப் பிரச்சனைக்கான பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த மத்திய அரசு அனுமதியளிக்கவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மதிமுகவின் அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னையில் வைகோதலைமையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை அரசுக்கம் விடுதலைப்புலிகளுக்கம் இடையிலான பேச்சவார்த்தை தாய்லாந்தில் நடக்கும் என்றுசெய்திகள் வந்துள்ளன.
புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தின் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில்உள்ளன. எனவே அவருடைய உடல்நிலையைக் கருதி இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்தமத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள குவைத் நாட்டுப் பெண்ணான தலால் ஆஸ்மியை மனிதாபிமான அடிப்படையில்ஜாமீனில் விடுவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர்எல்.கே. அத்வானியுடன் பேசவுள்ளேன்.
பாஜக-அதிமுக கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications