தலித்துகள் மீதான வழக்குகள் வாபஸ்: ஜெ. உறுதி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தலித் மக்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெற தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கரலிங்கபுரத்தில் இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தஜெயலலிதா, அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

தலித் மக்கள் தங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பதைத்தான் முக்கியக் கோரிக்கையாகவைத்துள்ளனர். அதற்கான உத்தரவாதத்தை அவர்களுக்கு நான் கொடுத்துள்ளேன்.

தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றுவேன் என்று கூறியுள்ளேன்.

அதற்கு இதுபோன்ற பிரச்சனைகள் இடையூறாக இருப்பதாகக் கருதுகிறேன். அவற்றைப் போக்குவதற்கானமுயற்சிகளை எடுக்கத்தான் இங்கு நானே நேரில் வந்துள்ளேன்.

இங்குள்ள இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசினேன். அவர்களுடைய கோரிக்கைகள் என்னென்ன என்பதையும்விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

இனிமேல் அவர்கள் பயப்பட வேண்டாம். அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்புகளையும்வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறினேன்.

அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்று அந்த மக்களிடம் கேட்டுக்கொண்டேன். அவர்களும் சரி என்று கூறியுள்ளனர்.

இதனால் என்னுடைய எண்ணம் ஈடேறியுள்ளது. மகிழ்ச்சியுடன் நான் சென்னை திரும்புகிறேன் என்றார்ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+