2வது திருமண ஆசை: மனைவியை அடித்த 55 வயது மிராசுதார் கைது

Subscribe to Oneindia Tamil

காங்கேயம்:

ஆண் வாரிசுக்கு ஆசைப்பட்டு 2வது திருமணம் செய்ய முயன்ற 55 வயது மிராசுதாருக்கு அனுமதி வழங்க மறுத்தமனைவியை அடித்த மிராசுதார் கைது செய்யப்பட்டார்.

காங்கேயம் அருகில் உள்ள முத்தூர் மோட்டாங்காட்டுவலசு என்ற இடத்தைச் சேர்ந்த மிராசுதார் குழந்தைசாமி (55).இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருந்துள்ளனர். சமீபத்தில் அவரது ஒரே மகன்இறந்துள்ளான்.

இந்நிலையில் எனக்கு ஆண் வாரிசு வேண்டும், அதற்காக 2வது திருமணம் செய்து கொள்கிறேன் என்று தன்மனைவியிடம் சொல்லி வந்தார் குழந்தைசாமி. ஆனால் அவரது மனைவி அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால்இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று மிராசுதார் திரும்பவும் தனது 2வது திருமண ஆசையை கூறியுள்ளார். ஆனால்இப்போதும் அவரது மனைவி அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மிராசுதார் உருட்டுக்கட்டையால்தனது மனைவியை தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் காங்கேயம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலும் லட்சுமி புகார் கொடுத்தார்.

லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குழந்தைசாமி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+