பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு: ஜெ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞரான ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு தண்டனை வழங்கி சென்னை தனி நீதிமன்றம்தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தினகர், கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வழங்கியதீர்ப்பில், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அன்றைய தினமே டான்சி வழக்கிலும் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து,எந்தவிதமான பிரச்சனையும் இன்றி ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டு, வென்று தமிழகமுதல்வராகவும் ஆகிவிட்டார்.
இதற்கிடையே பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்பாரதி மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச், இம்மனுவை ஏற்றுக் கொண்டனர்.
மேலும் தமிழக அரசுக்கும் இவ்வழக்கில் விடுதலையான மற்ற அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிஎம்.பி. ஷா மற்றும் நீதிபதி ருமா பால் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விரைவாக முடிப்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பாரதி வேண்டுகோள் விடுக்கலாம்என்றும் அந்த பெஞ்ச் கூறியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications