ஜம்முவில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜம்மு:
ரகுநாத் கோவில் தாக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்முவில் இன்று (திங்கள்கிழமை) 2வது நாளாக பந்த் நடக்கிறது.
கடந்த சனிக்கிழமை ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற ரகுநாத் கோவிலை சில தீவிரவாதிகள் தாக்கினர். இதையடுத்துநடந்த பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் மற்றும் நான்கு பாதுகாப்புப் படையினர்உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி பந்த் நடத்த ஜம்மு-கஷ்மீர் தேசிய சிறுத்தைகள்அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். இந்த பந்த்துக்கு பாஜக, வி.எச்.பி., அகில இந்திய இந்து சிவசேனா கட்சிகளும்ஆதரவளிப்பதாக தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக ஜம்முவில் பந்த் நடந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.
அரசு அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் மட்டும் சிறிதளவு மக்கள் வேலைக்கு சென்றனர். அரசுவாகனங்களும் சிறிதளவே ஓடின. எனினும் பதன்கோட், ஜம்மு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜம்மு மட்டும் அல்லாமல் உதாம்பூர், கத்துவா, ரியசி, சம்பா பகுதிகளிலும் பந்த் கடைபிடிக்கப்பட்டது. ஆனால்தோதா, ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் பந்த் எதுவும் நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications