காதலுக்காக ஒன்று சேர்ந்த தமிழக கட்சிகள்
சென்னை:
குவைத் நாட்டுப் பெண்ணின் காதலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல்கொடுத்துள்ளன.
ஆந்திராவைச் சேர்ந்த காதர் பாட்ஷாவுடன் போலி பாஸ்போர்ட் மூலமாக சென்னை வந்த தலால் ஆஸ்மி,போலீசாரிடம் சிக்கிக் கொண்டு தற்போது வேலூர் சிறையில் வாடி வருகிறார்.
தன்னைத் தன் காதலனுடன் சேர்க்கக் கோரி உண்ணாவிரதம் இருந்ததோடு நில்லாமல் மத்திய-மாநில அரசுகளுக்குக்கடிதங்களும் அனுப்பியுள்ளார் ஆஸ்மி.
திரும்பவும் குவைத்திற்கே அனுப்பினால் தன்னைக் கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள் என்று அலறும்ஆஸ்மி, தன்னை விடுதலை செய்து இந்தியாவிலேயே தனக்கு அடைக்கலம் கொடுக்கும்படி அனுமதி கோரி அந்தக்கடிதத்தை கண்ணீருடன் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
ஆஸ்மியை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ள ஜெயலலிதா, அவருக்கு இந்தியக்குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசுக்குதான் அதிகாரம் உண்டு என்று கூறி பிரதமர் வாஜ்பாய்க்கும்இதுகுறித்து தகவல் அனுப்பியுள்ளார்.
ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக மதிமுக தலைவர் வைகோ ஆஸ்மி விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்அத்வானியை இன்று (திங்கள்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளார். ஆஸ்மிக்கு உடனடியாக இந்தியக் குடியுரிமைபெற்றுத் தர வேண்டும் என்று அவர் அத்வானியிடம் வலியுறுத்தியுள்ளார்.
(வாஜ்பாயிடம் 15 நிமிடங்கள் மட்டுமே பேசி, நெய்வேலி அனல்மின் நிலையம் தனியார் மயமாக்கப்படாது என்றஉறுதிமொழியை வாங்கித் தந்தவர் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது).
இதற்கிடையே காதலினால் வாடும் ஆஸ்மிக்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பலகட்சித் தலைவர்களும் அனுதாபக் குரல்கள் எழுப்பி, ஆதரவு அறிக்கைகளும் வெளியிட்டுள்ளனர். திரைப்படஇயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட சில திரைப் பிரமுகர்களும்கூட இப்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
காதலுக்காக நாட்டையே துறந்து வந்துள்ள ஆஸ்மிக்காக குரல் கொடுக்க இத்தனை நெஞ்சங்களா என்றுஅவருடைய காதலரான காதர் பாட்ஷா நெகிழ்ந்து போயுள்ளார்.












Click it and Unblock the Notifications