இந்தியாவிலேயே வாழ அனுமதி கோரி ஜெ., வாஜ்பாய்க்கு குவைத் பெண் கடிதம்
வேலூர்:
தன்னுடைய காதலனைத் திருமணம் செய்துகொண்டு தன்னை இந்தியாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும்என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் குவைத் பெண் தலால் ஆஸ்மி கடிதம்எழுதியுள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த காதர் பாட்ஷா என்ற தன் காதலனுடன் சமீபத்தில் குவைத்திலிருந்து போலி பாஸ்போர்ட்மூலம் சென்னை வந்தார் ஆஸ்மி. போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒழுங்காகக் கையெழுத்துப் போடாததால் ஆஸ்மிசிறையில் அடைக்கப்பட்டார்.
தன்னைத் தன் காதலனுடன் சேர்த்து வைக்கும் வரை தான் சாப்பிடப் போவதில்லை என்று கூறி தொடர்ந்து மூன்றுநாட்களாக சிறையிலேயே ஆஸ்மி உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் தன்னை காதர் பாட்ஷாவுடன் சேர்த்து வைத்து, இந்தியாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்றுகோரி வாஜ்பாய்க்கும் ஜெயலலிதாவுக்கும் ஆஸ்மி தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதங்களின் நகல்கள் வேலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் சிறை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஆஸ்மியை ஜாமீனில் எடுக்க வக்கீல்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
வக்கீல்கள் எழிலரசி, குமார் ஆகியோர் வேலூர் மருத்துவமனைக்கு வந்து ஆஸ்மியை சந்தித்துப் பேசினர். பிறகுமருத்துவமனை நிர்வாகத்திடம் உள் நோயாளி என்ற சான்றிதழையும் வாங்கிச் சென்றனர்.
ஆஸ்மியை ஜாமீனில் எடுக்க இன்று (திங்கள்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்யஉள்ளனர்.












Click it and Unblock the Notifications