மீண்டும் ஓட ஆரம்பித்தது ஊட்டி மலை ரயில்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரயில் போக்குவரத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும்தொடங்கியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும் குன்னூர் அருகே புதுக்காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது.
இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அடித்துச் செல்லப்பட்ட பாலத்திற்கு பதில் புதிய பாலம்கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.10க்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில்புறப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் பயணம் செய்தனர்.












Click it and Unblock the Notifications