சென்னை: "போதை" போலீஸ் ஏட்டை அறைந்த அதிகாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பணி நேரத்தில் மது அருந்திவிட்டு நண்பர்களுடன் போதையில் பேசிக் கொண்டிருந்த போலீஸ் ஏட்டை உயரதிகாரிகன்னத்தில் அறைந்ததில் அவருடைய உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

சென்னை சட்டக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் மூர்த்தி. கடந்த சனிக்கிழமை இரவு பணியில்இருந்தபோதே, தன் நண்பர்களுடன் மூர்த்தி மது அருந்தினார்.

இரவு முழுவதும் நண்பர்களுடன் "போதை"க் கச்சேரியை நடத்திய மூர்த்தி, விடிந்த பிறகு நண்பர்களுடன் நடுரோட்டில் நின்று அரட்டையடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் துணை கமிஷனர், கூட்டமாக நின்று கொண்டிருந்த இவர்களைவிசாரித்தார். அப்போது பணியிலிருந்துபோதே மூர்த்தி மது அருந்தியிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து மூர்த்தியை துணை கமிஷனர் கண்டிக்கவே, "நீங்கள் என்னைக் கேட்பதற்கு அதிகாரம் இல்லை" என்றுமூர்த்தி தகராறு செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உதவி கமிஷனர், மாறி மாறி மூர்த்தியின் கன்னத்தில் அறைந்தார். அவர் அறைந்தவேகத்தில் மூர்த்தியின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

உடனே மூர்த்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த வாரம்தான் மதுரையில் ஆயுதப் படை காவலரான வன்னியன் என்பவரை, தனக்கு சல்யூட் அடிக்காதகாரணத்திற்காக அவருடைய உயரதிகாரியான பெண் சப்-இன்ஸ்பெடக்டர் ரெஜினா கன்னத்தில் அறைந்தார்என்பது நினைவிருக்கலாம். அவர்கள் இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+