உயர்ந்தது ரயில் கட்டணம்
டெல்லி:
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 12 மணி முதல் ரயில் கட்டணஉயர்வு அமலுக்கு வந்தது.
கடந்த பிப்ரவரி 26ம் தேதி ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அத்துறைக்கான மத்திய அமைச்சர் நிதீஷ் குமார்,இரண்டாம் வகுப்பு, சீசன் ரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கட்டண உயர்வுகளை அறிவித்தார்.
அதன்படி இன்று அதிகாலை 12 மணி முதல் இந்த ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இனி வரும் நாட்களுக்கு ஏற்கனவே முன் பதிவு செய்தவர்களும் இந்தக் கட்டண உயர்வுக்கு ஏற்ப கூடுதல்கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டண உயர்வுப்படி, தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஊர்களுக்கு இடையிலான புதிய 2வது வகுப்பு ரயில்கட்டண விவரம் (அடைப்புக் குறிக்குள் பழைய கட்டணம்):
சென்னை-மதுரை: ரூ.215 (ரூ.196)
சென்னை-கோயம்புத்தூர்: ரூ.215 (ரூ.196)
சென்னை-திருநெல்வேலி: ரூ.266 (ரூ.248)
சென்னை-திருச்சி: ரூ.166 (ரூ.156)
சென்னை-சேலம்: ரூ.166 (ரூ.156)
சென்னை-பெங்களூர்: ரூ.175 (ரூ.165)
பெங்களூர்-மதுரை: ரூ.235 (ரூ.222)
பெங்களூர்-தூத்துக்குடி: ரூ.276
பெங்களூர்-நாகர்கோவில்: ரூ.316


Click it and Unblock the Notifications
