ஒருவழியாய் பதவியேற்றார் தலித் பஞ்சாயத்து தலைவர்
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் ஒருவழியாய் சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதனிக்கொடி பதவியேற்றுக் கொண்டார்.
தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது இந்த பஞ்சாயத்து யூனியன். ஆனால் பாப்பாப்பட்டியில் பெரும்பான்மையாக இருப்பதுஇன்னொரு சமூகத்தினர். இதனால் தலித் ஒருவர் எங்களுக்குத் தலைவராக வருவதை ஏற்க முடியாது என்று அவர்கள் தேர்தலைநடத்த விடாமல் தடுத்து வந்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து பலத்தபாதுகாப்புடன் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது.
ஆனால், போலீஸ் பாதுகாப்பு இருந்தும் கூட இங்கு போட்டியிட்ட தலித் வேட்பாளர்கள் இத் தொகுதியில் முழுவதுமாக பிரச்சாரம்செய்ய முடியவில்லை. அவர்கள் பிரச்சாரம் செய்ய தங்கள் பகுதிக்குள் வரக் கூடாது என்று மாற்று சமூகத்தினரால்தடுக்கப்பட்டுவிட்டனர்.
ஒரு வழியாய் பிரச்சாரம் முடிந்து தேர்தலும் வன்முறை இன்றி நடந்து முடிந்தது. இத் தொகுதியுடன் சேர்த்து கீரிப்பட்டி மற்றும்இன்னொரு தலித் தொகுதியிலும் யில் தேர்தல் நடந்தது.
இதில் பாப்பாபட்டியில் பொதுமக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட தனிக்கொடி என்பவர் வெற்றி பெற்றார். இதையடுத்து தனிக்கொடிவியாழக்கிழமை தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
செல்லம்பட்டி யூனியன் துணை தேர்தல் அதிகாரி ராம் மனோகர் லோஹியா முன் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.புதிதாக பதவியேற்றுக் கொண்ட தலைவர் தனிக்கொடியை தேர்தல் அதிகாரியும், செலமல்பட்டி கமிஷனருமான பார்த்தசாரதிஉள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
-சில வருடங்களுக்கு முன் கீழவளவில் தலித் பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் இதே போன்ற பிரச்சனை காரணமாக வெட்டிக்கொல்லப்பட்டார். இதையடுத்து தலித் தொகுதிகளில் போடடியிடவே தலித்கள் அஞ்சும் நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது.
இப்போது பதவியேற்றுள்ள தலித் பஞ்சாயத்துத் தலைவர் தனிக்கொடிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்குஉள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications