குஜராத்தில் திட்டமிட்ட வன்முறை: பிரிட்டன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் நடக்கும் வன்முறைகள் திட்டமிடப்பட்டே நடக்கின்றன என்றும் மாநில அரசே வன்முறையைத்தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள்தெரிவித்தனர்.

சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டே இன வன்முறை தூண்டிவிடப்பட்டுள்ளது என்று கூறிய அந்தஅதிகாரிகள், நரேந்திர மோடி அம்மாநில முதல்வராக இருப்பது வரை பிரச்சனை தீரவே தீராது என்றும்தெரிவித்தனர்.

சமீபத்தில் கனடாவும் குஜராத் வன்முறைக்கு எதிராகத் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. ஆனால்இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை என்று வெளியுறவுத்துறைஅமைச்சக செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் கூறியிருந்தார்.

ஆனாலும், இந்தியா எங்களுடைய நட்பு நாடு. அங்கு நடக்கும் இன வன்முறைகளைப் பற்றி சுட்டிக் காட்டுவதற்குஎங்களுக்கு நட்பு ரீதியிலான உரிமை உண்டு என்று கனடா மீண்டும் கூறியது.

இந்நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கமும் குஜராத் விவகாரத்தில் தலையிட ஆரம்பித்துள்ளது. அம்மாநில அரசைக்கடுமையாகச் சாடியுள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள், மோடி பதவியில் இருக்கும் வரை பிரச்சனை வளர்ந்துகொண்டேதான் இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

மோடியைப் பாதுகாத்து வரும் மத்தியில் உள்ள பாஜக அரசையும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கடுமையாகவிமர்சித்தனர்.

குஜராத்தில் மேலும் 2 பேர் சாவு:

இதற்கிடையே குஜராத்தில் தொடரும் வன்முறைக்கு மேலும் 2 பேர் நேற்றிரவு கொல்லப்பட்டனர்.

வேஜால்பூர், ஜமல்பூர் மற்றும் வாஸ்னா ஆகிய பகுதிகளில் வன்முறையைத் தூண்டிவிட்ட கும்பல் மீது போலீசார்நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து கடந்த ஆறு நாட்களில் குஜராத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் பலியானவர்களின்எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.

மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு:

இதற்கிடையே வன்முறை காரணமாகத் தேர்வு எழுத முடியாமல் போன பத்தாவது மற்றும் பிளஸ் டூமாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று குஜராத் அரசு இன்று அறிவித்துள்ளது.

வன்முறையின்போது ஏராளமான மாணவர்கள் தேர்வு மையத்துக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். சிலர் தேர்வுஎழுதப் போவதற்கே பயந்தனர். மேலும் சுமார் 90 சதவீத முஸ்லீம் மாணவர்கள் தேர்வுகளையே புறக்கணித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+