பாகிஸ்தானில் மனித குண்டு வெடித்து 14 பேர் பலி
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று காலை ஒருவன் தன் உடம்பில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு, ஒருகாரில் சென்று அந்நாட்டுக் கடற்படைக்குச் சொந்தமான ஒரு பஸ்சில் சென்று மோதியதில், அந்த பஸ் வெடித்துச்சிதறி 10 பிரான்ஸ் நாட்டினர் உள்பட 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இன்று காலை 7.10 மணிக்கு ஷெராட்டன் ஹோட்டலின் போர்ட்டிகோவில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம்நிகழ்ந்தது.
கராச்சியில் உள்ள துறைமுகத்தில் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் பணியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல ஊழியர்களும்ஈடுபட்டிருந்தனர்.
தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து துறைமுகத்திற்குக் கிளம்பும்போதுதான் இந்தப் பயங்கரக் குண்டுவெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. திருடிய காரைக் கொண்டுதான் ஒருவன் அந்த பஸ்சில் மோதி வெடிக்கச்செய்துள்ளான்.
இந்த ஹோட்டல் இருந்த அதே தெருவின் மறு பகுதியில்தான் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்தனர்.இந்த வெடிகுண்டுச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடனேயே, அவர்கள் தங்கள் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தைஉடனடியாக முடித்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்றுதான் கராச்சியில் துவங்குவதாகஇருந்தது.
இந்தக் குண்டு வெடிப்புக்கு இன்னும் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications