தர்மபுரி அருகே திமுக பஞ்சாயத்து தலைவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தளி பஞ்சாயத்து யூனியன் தலைவரான திமுகவைச் சேர்ந்த வெங்கடேஷ் இன்று (புதன்கிழமை)பட்டப் பகலில் 12 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வெங்கடேஷ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தஉள்ளாட்சித் தேர்தலின்போது, தளி பஞ்சாயத்து யூனியனின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று காலை டெலிபோன் செய்வதற்காக அவர் தன் வீட்டிலிருந்து அருகிலுள்ள எஸ்.டி.டி. பூத்துக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்தது. துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள்,ஆசிட் பாட்டில்கள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்த அக்கும்பல், வெங்கடேஷைசராமாரியாகத் தாக்கியது.

இந்தத் திடீர்த் தாக்குதலால் அதிர்ந்து போன வெங்கடேஷ் அவர்களிடமிருந்து தப்பி ஓட ஆரம்பித்தார். ஆனால்அந்தக் கும்பல் விடாமல் துரத்தி, வீச்சரிவாள்களால் அவரை சராமாரியாக வெட்டியது.

இதுபோக வெங்கடேஷ் மீது அந்தக் கும்பல் வெடிகுண்டுகள் மற்றும் ஆசிட் ஆகியவற்றையும் வீசித் தாக்கியது.

இந்தப் பயங்கரமான தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமாகிச் சரிந்தார் வெங்கடேஷ்.

இதையடுத்து அவரைக் கொலை செய்த 12 பேரும் துப்பாக்கிகளால் சுற்றிலும் ஒரு ரவுண்டு சுட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தளி கிராம மக்கள் ஏராளமாகத் திரண்டு வந்து, அந்த வழியாக வந்த பஸ்கள்மற்றும் வாகனங்களை கற்களால் வீசித் தாக்கினர். இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்குபெரும் கலவரம் மூளும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அப்பகுதிமுழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாயத்துத் தலைவரே கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொலையாளிகள் நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+