ஈரோடு: விஷ உணவு சாப்பிட்ட 4 தோட்ட தொழிலாளர்கள் பலி
ஈரோடு:
ஈரோடு அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 9 தோட்டத் தொழிலாளர்களில் 4 பேர் பலியானார்கள். மற்ற 5பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள 30 குடும்பங்கள் கரும்புக் காட்டில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள்வெள்ளோட்டம்பரப்பு பகுதியில் உள்ள நடுப்பாளையில் கூடாரமிட்டு வசித்து வருகின்றனர்.
தினமும் தங்கள் வேலைகளை முடித்த பின்னர், அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வெட்ட வெளியில்உணவு சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
தொப்பலி (13), சங்கீதா (19), பாலமுருகன் (20) , அஞ்சலை (27), செல்வராஜ் (28), மாரியம்மாள் (30), பாப்பாத்தி(35) மற்றும் பிச்சையம்மாள் (40) உட்பட 9 பேர் நேற்று தனியாக உணவு சமைத்தனர்.
இந்த 9 பேரும் தாங்கள் சமைத்த உணவைச் சாப்பிடும்போது, உணவு கசப்பாக இருந்ததை உணர்ந்தனர். உணவில்பச்சிலை விழுந்திருக்கலாம் என்று நினைத்து மீதி உணவையும் அவர்கள் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்ட அரைமணி நேரத்திலேயே அனைவரும் வாந்தியெடுத்து மயங்கி விழுந்தனர்.
மயங்கி விழுந்தவர்களை மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.இதில் பாலமுருகன் மற்றும் மாரியம்மாள் ஆகிய இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயேஉயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மீதி ஐந்து பேரும் உயிருக்குஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உணவில் விஷ இலை விழுந்ததா அல்லது விஷ ஜந்து விழுந்ததா என்பது பற்றி தெரியவில்லை என்று டாக்டர்உசேன் அலி கூறினார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் இந்த 9 தொழிலாளர்களும் சேர்க்கப்பட்ட பிறகும், அரை மணி நேரம் கழித்தேடாக்டர்கள் வந்து அவர்களுக்குச் சிகிச்சை அளித்தனர். டாக்டர்களின் இந்த அலட்சியத்தால்தான் 2 பேர்உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications