ராமேஸ்வரம் கடலில் புலியின் உடல்: கரை ஒதுங்கிய படகு
ராமேஸ்வரம்:
விடுதலைப் புலி ஒருவரின் உடல் பலத்த காயங்களுடன் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்பகுதியில்கிடக்கிறது.
இவர் கடற்புலி கமாண்டோ என்று தெரிகிறது. சமீபத்தில் புலிகளின் படகுகளை இலங்கை கடற்படை வழிமறித்துத்தாக்கியது. இந்தத் தாக்குதலில் இவர் இறந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
கமாண்டோவின் சீருடையில் உள்ள அந்த உடல் முழு அளவில் அழுகிப் போய் உள்ளதாக மீனவர்கள்தெரிவித்தனர். மீன்களால் கடிபட்டதில் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போய் உள்ளது.
இந்த உடல் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த அப் பகுதி மீனவர்கள் உடனே போலீசாருக்குத்தகவல் கொடுத்தனர்.
ஆனால், போலீசார் வருவதற்குள் அந்த உடல் மீண்டும் அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டது.மீண்டும் அந்த உடல் இதே பகுதியில் வேறு எங்காவது கரை ஒதுங்கும் என மீனவர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரத்தில் புலிகளின் இரு படகுகளை இலங்கை கடற்படை தகர்த்தது. இதில் எத்தனை பேர் இறந்தனர் என்றவிவரம் தெரிவிக்கப்படவில்லை. இத் தாக்குதலில் இறந்த புலியின் உடல் தான் இது என்று உளவுப் பிரிவினர்கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புலிகள் ஊடுருவலா?
இந் நிலையில் புலிகள் பயன்படுத்தி வரும் பைபர் கிளாஸ் படகு ஒன்று கரையோர கிராமமான நரிக்குழி அருகேநேற்று இரவு கரை ஒதுங்கியது. இது கடற்கரையில் மணலில் புதைந்து கிடந்தது.
இந்தப் படகில் சில விடுதலைப் புலிகள் ராமேஸ்வரத்துக்குள் வந்திறங்கியிருக்கலாம் என்று போலீசார்கருதுகின்றனர். அவர்கள் தங்கள் கடற்புலி கமாண்டோவின் உடலை மீட்டுச் செல்ல வந்திருக்கலாம் என்றும்கருதப்படுகிறது.
அவர்களைப் பிடிக்கும் பணியில் தமிழக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடலோரமாவட்டங்களில் தான் அவர்கள் பதுங்கியிருக்கக் கூடும் என போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications