மகன், மகளுடன் 15 நாட்கள் தனியறையில் தங்கிய பெண்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒரு ஆய்விற்காகத் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் 15நாட்களுக்கு வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஒரு தனியறையில் வசித்துவிட்டு சமீபத்தில் வெளியே வந்தார்ஒரு பெண்.

ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் தனித் தனியே "உயிர்க் கடிகை" (biological clock) எனப்படும் கடிகாரம் உள்ளது.இதைக் கொண்டுதான் அனைத்து உயிரினங்களும் நேரத்திற்கு தூங்கி, எழுந்து, உணவு உட்கொண்டு வாழ்கின்றன.

மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களுமே (செடி, கொடிகள் உள்பட) சூரியன் உதிப்பதை வைத்தும், அதுமறைவதை வைத்துமே நேரத்தைக் கணக்கிடுகின்றன. அதற்கேற்றவாறு தங்களுடைய ஒரு நாளைப் பிரித்துவைத்துக் கொண்டு செயல்படுகின்றன.

ஆனால் மனிதர்கள் மட்டும்தான் தன்னுடைய எல்லாச் செயல்களுக்குமே கடிகாரத்தை நாடிக்கொண்டிருக்கிறார்கள். சூரியன் உதிக்கும்போது தூக்கத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்று நினைக்காதநாம், எட்டு மணி ஆகிவிட்டது என்று தெரியும்போது மட்டுமே தலை தெறிக்க படுக்கையை விட்டு எழுந்து, அவசரஅவசரமாக அலுவலகத்துக்கோ, பள்ளிக்கோ ஓடுகிறோம்.

இதுபோலவே காலை 9 மணிக்கு டிபன், மதியம் 1 மணிக்கு வயிறுமுட்ட சாப்பாடு, இரவு 9 மணிக்கு டிவிபார்த்துக் கொண்டே தோசை என்று நம்முடையை ஒவ்வொரு வேலையையும் கடிகாரத்தைப் பார்த்தே செய்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொண்டே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் சூரிய ஒளியும் இல்லாமல், கடிாகாரமும் இல்லாமல் நேரம் காலம் தெரியாத ஒரு தனியறைக்குள் மனிதனைஅடைத்து வைக்கும்போது தான் தன் உடலில் இருக்கும் "உயிர்க் கடிகாரத்தை" மனிதன் முழுமையாக சார்ந்துஇருக்கத் தொடங்குகிறான்.

இந்த மனித கடிகாரம் தொடர்பான ஆராய்ச்சி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவில் கடந்த 15ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த உயிரியல் பிரிவில் உள்ள விலங்கு நடத்தையியல் துறையின்தலைவரான டாக்டர் ஜி. மாரிமுத்து தற்போது இந்த ஆராய்ச்சியை நடத்தி வருகிறார்.

இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட ஆணோ அல்லது பெண்ணோ மட்டுமே தனித்தனியாக இந்தத் தனியறைக்குள்அடைக்கப்பட்டு, தங்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டனர்.

ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியரை (அதாவதுஒருவருக்கு மேற்பட்டவர்களை) இந்தத் தனியறைக்குள் அனுப்பி ஆய்வை மேற்கொண்டார் டாக்டர் மாரிமுத்து.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளை தனியறைக்குள் அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்த அவர், இதற்காகத்தன்னுடைய குழந்தைகளையே "உள்ளே" அனுப்பினார். அந்தக் குழந்தைகள் துணைக்காக தங்களுடன் தாயையும்அழைத்துக் கொள்ள விரும்பினர்.

இதையடுத்து, டாக்டர் மாரிமுத்துவின் மனைவியான கலாவதி (42), மகன் ரமேஷ் (14) மற்றும் துர்கா (12)ஆகியோர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி தனியறைக்குள் சென்றனர்.

தனியறைக்குள் அவர்களுடைய நடவடிக்கைகள் குறித்து கடந்த 15 நாட்களாக டாக்டர் மாரிமுத்து தலைமையிலானஆராய்ச்சியாளர்கள் கவனித்து வந்தனர். பின்னர் அவர்கள் கடந்த மே 9ம் தேதி மாலை 3.30 மணியளவில்வெளியே வந்தனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் பொன்னுச்சாமி உள்ளிட்ட பேராசிரியர்களும்,நண்பர்களும் கலாவதி மற்றும் குழந்தைகளை அன்புடன் வரவேற்றனர்.

தனியறையைவிட்டு வெளியேறிவிட்ட போதிலும், இன்னும் தொடர்ந்து உள்ளேயே இருக்க விரும்புவதாக அந்தமூவரும் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தனர். வெளியே எப்படி சாதாரணமாக இருந்தார்களோ அதேபோலவே"உள்ளே"யும் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இந்த மூவருடைய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வை நடத்திய டாக்டர் மாரிமுத்து நிருபர்களிடம் கூறுகையில்,இவர்களிடம் நேர வேறுபாடு அவ்வளவாக இல்லை என்றும் தினமும் 24 மணி நேரத்தை ஓரளவு சரியாகவேகணித்து விட்டனர் என்றும் கூறினார்.

மருத்துவத் துறையிலும் விண்வெளித் துறையிலும் பெரும் பங்களிக்கக் கூடியது இந்த நூதன ஆய்வு என்றும்தெரிவித்த டாக்டர் மாரிமுத்துதான், கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தத் தனியறைக்குள் முதன் முதலாகச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+