ஜெயலலிதாவுடன் மதுரை திமுக மேயர் சந்திப்பு
சென்னை:
மதுரை மாநகர திமுக மேயரான செ. ராமச்சந்திரன் தலைமையிலான 10 பேர் கொண்ட அனைத்துக் கட்சிகள் குழுஇன்று (திங்கள்கிழமை) காலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தது.
சென்னை மாநகர மேயராகிய மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் என்ற முறையில் தன்னை இன்னும் வந்துசந்திக்கவில்லை என்று ஜெயலலிதா பல முறை கூறி வந்தார்.
ஆனால் தான் சந்திப்பதற்காக எவ்வளவோ அனுமதி கேட்டும் ஜெயலலிதாவிடமிருந்து அதற்கான அனுமதிகிடைக்கவில்லை என்று ஸ்டாலின் பதில் கூறியிருந்தார்.
இதற்கிடையே ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு ராமச்சந்திரன் அனுமதி கேட்டிருந்தார். அவருக்கும் உடனேஅனுமதி கிடைத்தது.
அதன்படி ராமச்சந்திரன் தலைமையிலான 10 பேர் கொண்ட அனைத்துக் கட்சிக் குழுவினர் இன்று காலைஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர்.
மதுரை மாநகராட்சிக்கு தமிழக அரசு தர வேண்டிய ரூ.11 கோடி நிதியை உடனடியாக அளிக்க வேண்டும் என்றுஅவர்கள் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு வெளியே வந்த ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரை மாநகராட்சிக்கு தமிழக அரசிடமிருந்து வந்து சேர வேண்டிய நிதியைத் தரக் கோரி வலியுறுத்துவதற்காகவேநாங்கள் இங்கே வந்துள்ளோம்.
தமிழக சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட "ஒருவருக்கு ஒரு பதவி" என்ற புதிய சட்டத்தை நான்கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.
ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளதால் அவர் கட்சி மாறப் போவதாகச் செய்திகள் வருவது குறித்து நிருபர்கள்கேட்டபோது, கண்டிப்பாக நான் கட்சி மாற மாட்டேன் என்றார் ராமச்சந்திரன்.
ராமச்சந்திரனுடன் மதுரை எம்.பியான மோகன், எம்.எல்.ஏக்கள் மற்றும் மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள்ஆகியோரும் ஜெயலலிதாவைச் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஒரு மேயர் (அதிலும் திமுகவைச் சேர்ந்த ஒரு மேயர்) அவரைவந்து சந்திப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications