பெங்களூர்-தூத்துக்குடி ரயிலில் கொள்ளை: 2 பேருக்கு கத்திக் குத்து
திருப்பத்தூர்:
பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை பயங்கரகொள்ளை நடந்தது. பயணிகளை கத்தியால் குத்தி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளையும்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
நேற்றிரவு 9.50 மணிக்கு பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய இந்த ரயில், இன்று அதிகாலைசுமார் 1.30 மணியளவில் திருப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு ரிசர்வ் பெட்டியில்உட்கார்ந்து இருந்த 4 பேர் திடீரென அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர்.
இதையடுத்து ரயிலை டிரைவர் அவசர பிரேக் போட்டு நிறுத்தினார். இதையடுத்து அந்த நான்கு பேரும் எழுந்து,அந்தப் பெட்டியிலும் அருகில் இருந்த 3 பெட்டிகளிலும் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளைத் தட்டி எழுப்பினர்.
பின்னர் அந்தப் பயணிகளிடம் கத்தியையும் அரிவாளையும் காட்டி மிரட்டி நகைகளையும் பணத்தையும் பறித்தனர்.அவர்கலைப் பார்த்து கூக் குரல் எழுப்பிய பெண் பயணிகள் உடனே தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றித்தந்துவிட்டனர்.
நகை, பணத்தைத் தர மறுத்து போராடிய இரு ஆண் பயணிகளை கொள்ளையர்கள் கத்தியால் குத்தினர். இதில்அவர்கள் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்த மற்றவர்கள் மறுபேச்சு பேசாமல் நகைகளைக் கழற்றித் தந்தனர்.
அரைகுறைத் தூக்கத்தில் இருந்த பயணிகளிடம் கத்தியையும் அரிவாளையும் கொள்ளையர்கள் காட்டிமிரட்டியதால் அவர்களால் சுதாரிக்கக் கூட முடியவில்லை. சில நிமிடங்களில் நகை, பணத்தைப் பறித்துக் கொண்டுஅந்தக் கொள்ளையர்கள் ரயிலில் இருந்து இறங்கி இருட்டில் ஓடி மறைந்துவிட்டனர்.
இச் சம்பவத்தால் அனைத்துப் பயணிகளும் விழித்துக் கொண்டனர். பாதுகாப்புக்கு இருந்த ரயில்வே போலீசாரும்ரயிலின் கார்டும் என்ஜின் டிரைவரும் ஓடி வந்தனர். பயணிகளுக்கு கத்துக் குத்துக் காயம் ஏற்பட்டிருந்ததால் ரயில்உடனடியாகக் கிளப்பப்பட்டது. அவர்கள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து, கொள்ளையர்களைத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சமீப காலங்களில் பாதுகாப்புக்காகநிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ரயிலில் போலீசார் சம்பவம் நடந்தபோது என்ன செய்து கொண்டிருந்தனர்என்று தெரியவில்லை.
சில தினங்களுக்கு முன்பு தான் சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலான பல்லவனில் கொள்ளை நடந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications