தருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு பஸ்சில் கொள்ளை
தருமபுரி:
தருமபுரி அருகே அரசு பஸ் ஒன்றில் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து, துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடமிருந்துநகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டன.
வேலூரிலிருந்து ஈரோட்டிற்கு நேற்று அதிகாலை இந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம்அரூரை அடுத்த கோம்பூர் அருகே ஒரு சாலையோர டீக்கடையில் காலை 3 மணிக்கு நிறுத்தப்பட்டது.
டிரைவர், கண்டக்டர் மற்றும் சில பயணிகள் டீ குடிப்பதற்காகக் கீழே சென்றவுடன், அந்த பஸ்சிற்குள் 6 பேர்கொண்ட ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தது. துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை அவர்கள்வைத்திருந்தனர்.
பின்னர் திடீரென்று அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டனர். இதைத் தொடர்ந்துதுப்பாக்கி முனையிலேயே பஸ்சிற்குள் இருந்த பயணிகளை மிரட்டி, அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தைப்பிடுங்கிக் கொண்டனர்.
அதன் பிறகு அந்தக் கும்பல் பஸ்சை விட்டு இறங்கி, இருளில் ஓடி மறைந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும்பணத்தின் மதிப்பு ரூ.1.3 லட்சம் என்று தெரிகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தருமபுரி போலீசார், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப் படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications